சொந்த தந்தை திடீர் மரணம்! பொருட்படுத்தாமல் ஆன்மிகப் பணியை தொடர்ந்த சத்குரு! நெகிழ வைத்த செயல்!

தந்தை இறந்தபோதும்கூட ஆன்மிக பணியில் இடையறாது இயங்கிய சத்குரு.


கோவை ஈஷா யோகா மைய நிறுவனரும், ஆன்மிக குருவாமான சத்குரு அவர்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் அவரின் தந்தை டாக்டர்.வாசுதேவ் அவர்கள் மைசூரில் கடந்த 8-ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார். 95 வயதான திரு.வாசுதேவ் இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராக சேவையாற்றியவர். வயது மூப்பின் காரணமாக இறந்துள்ள அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மைசூர் ரயில்வே மருத்துவமனையிலிருந்து ஓய்வுபெற்றார்.

டாக்டர். வாசுதேவ் அவர்களின் இறுதி சடங்குகளை மைசூரில் அவரின் குடும்பத்தினர் செய்தனர். அவருக்கான காலபைரவ கர்மா சடங்கு கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று(நவ 11) காலை 11 மணிக்கு நடைபெற்றது. 

இதுவரை சத்குரு, அவரின் 37 வருடகால ஆன்மிக பணியில், ஒரு நாள் கூட தான் உறுதி அளித்திருந்த எந்த நிகழ்ச்சியையும் தனிப்பட்ட காரணங்களுக்காக ரத்து செய்ததில்லை. 

அதேபோல் தன் தந்தை இறந்த இந்நேரத்தில் கூட, அமெரிக்காவில் உள்ள டொரண்டோ மாகாணத்தில் நடக்கவிருக்கும் ஈஷா யோகா இன்னர் இன்ஜினீயரிங் நிகழ்சிக்கு தான் அளித்திருந்த உறுதிக்காக கொஞ்சம் மனம் தளராமல் இயங்கி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தன் தந்தையின் இறுதிச்சடங்குகள் எதிலும் பங்கேற்க முடியாத இச்சூழ்நிலையில், சத்குரு அவரின் அழ்ந்த வருத்தத்தை அஞ்சலி கடிதமாக எழுதியுள்ளார், அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது.

என் தந்தைக்கு இவ்வுலகின் சூதுவாதுகளை நீங்கள் அடையாளம் காணவில்லை என்றாலும் முழு அர்ப்பணிப்போடும், பக்தியோடும் உங்களால் முடிந்ததையெல்லாம் அனைவருக்கும் செய்தீர்கள். நீங்கள் நினைத்தது போலன்றி உங்கள் பிள்ளைகள் வெவ்வேறு விவதமாக வளர்ந்து நின்றது உங்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் அவர்களுக்குத் துணையாக நிற்கவோ அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடவோ நீங்கள் என்றும் தவறியதில்லை.

ஒரு கணவனாக உங்களைவிட வேறொரு சிறந்த கணவர் இருக்கமுடியாது என்று அன்பிற்குரிய எங்கள் அன்னையே பாராட்டினார். தீங்கற்ற உங்கள் இருப்பு வியப்பில் ஆழ்த்துகிறது மிகுந்த அன்புடன், சத்குரு.

இவ்வாறு அவரின் வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன் தந்தை இறந்தபோதும் கூட, ஆன்மிக பணியில் தொடர்ந்து இயங்கும் சத்குருவின் இந்த உறுதியும், அர்பணிப்பு உணர்வும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.