சபரிமலை தரிசனம்! மகளை மடியில் வைத்து பயணம் செய்த அய்யப்ப சாமி தந்தைக்குக்கு ஏற்பட்ட பயங்கரம்!

தேனியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற பக்தர்கள் காயம் அடைதனர்.


தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐயப்ப பக்தையான 8 வயது சிறுமி வர்ஷா படுகாயம் அடைந்து உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மற்ற பக்தர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததோடு காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

போலீஸார் நடத்திய விசாரணையில் கார் ஓட்டுநர் சீனிவாசன் தூக்க கலக்கத்தில் காரை இயக்கிதாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய அனைவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். காரில் சிறுமி வர்ஷா அவரது தந்தை கார்த்திக், கார்த்திக்கின் நண்பர்கள் அனைவரும் மாலை போட்டுக்கொண்டு சபரிமலை சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

இருசக்கர வாகனமோ, விமானமோ அதில் பயணம் செய்யும் ஒவ்வொருவரின் உயிரும் அந்த ஓட்டுநர் கையில்தான் உள்ளது. அவர்கள் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாலே இதுபோன்ற அனாவசிய விபத்துகளை தவிர்க்கலாம்.