ஓடும் ரயில்! தண்டவாளம் - பிளாட்பார்ம் இடையே சிக்கிய இளைஞன்! திக்திக் நிமிடங்கள்!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறிக் கீழே விழப்பார்த்த பயணியை ரயில்வே போலீசார் மீண்டும் உள்ளே தள்ளிவிட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.


குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரயில் அங்கு இருந்து புறப்பட்டது. அப்போது நிதானமாக ரயில் புறப்பட்டதும் கண்டு மெதுவாக நடந்து வந்து ஏற முயற்சித்த பயணி ஒருவர் தடுமாறி கம்பியை பிடித்தவாறு தொங்கிக்கொண்டு தடுமாறினார்.

இதைக்கண்ட ரயில்வே போலீசார் தொங்கியபடி சென்ற பயணியை உள்ளே தள்ளிவிட்டு காப்பாற்றி உள்ளனர். சிறிது நேரம் தாமதமாகி இருந்தால் தடுமாறிக் கொண்டிருந்த பயணி செல்லும் ரயில் மற்றும் நடைமேடைக்கும் நடுவே இருந்த இடைவெளியில் தவறி விழுந்து உயிர் இழக்க நேரிட்டு இருக்கும். 

இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நோக்கத்தோடு ரயில்வே நிர்வாகம் இதை வெளியிட்டுள்ளது.