தமிழகத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர் பயிற்சி? கிருஷ்ணகிரியில் விறுவிறு சோதனை!

கிருஷ்ணகிரியில் ராக்கெட் லாஞ்சர் செலுத்தப் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள்.


பெங்களூரில் இருந்து என்.ஐ.எ அதிகாரிகள் நேற்றிரவு கிருஷ்ணகிரியை அடுத்த சையத் பாஷா மலைப் பகுதியில் நடத்திய சோதனையில் அங்கே தீவிரவாதிகள்,வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள்,ஜெலட்டின் குச்சிகள் பயண்படுத்தி பயிற்சி எடுத்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன.

மேற்குவங்க மாநிலம் புர்கானில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று மாதம் முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் பெங்களூர் நகரில் முகமது ரஹ்மான்,கவுசர் என்கிற இருவரை கைது செய்தது.அடுத்தகட்ட விசாரணையில் இவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

வங்கதேசத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பாடு ' ஜமாத் உல் முஜாகிதீன்' என்கிற தீவிரவாத அமைப்பு இந்தியாவில் காலூன்ற எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.ஜார்கண்ட், பீஹார்,மகாராஷ்ட்ரா, கர்நாடகா,மற்றும் கேரள மாநிலங்களில் கூலித்தொளிலாளர்கள் என்கிற போர்வையில் ஊடுருவி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள்தான் ஊடுருவ முயன்று வருவதாக கருதி இருந்த என்.ஐ.ஏவை இந்த வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஊடுருவல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ராக்கெட் லாஞ்சர் பயண்படுத்தி பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர்,அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து என்.ஐ.ஏ விசாரணையை துரிதப்படுத்தி வருகிறது.இதற்கிடையே தீவிரவாதிகள் பிடிபட்ட கர்நாடகத்தின் பக்கத்து மாநிலமான மகாராஷ்ட்ராவில் சட்டமன்ற தேர்தல் நடை பெறுவதால் விவகாரம் மேலும் சிக்கலாகி இருக்கிறது.