பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக இருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
சீண்டிய ரோபோ சங்கர்! கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி ஓட்டம்!

இவருடைய விடாமுயற்சியும் உழைப்பும் தான் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை தேடி தந்துள்ளது. இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது "Mr. லோக்கல்" என்ற திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். முன்னணி நட்சத்திரமான நயன்தாரா, ரோபோ ஷங்கர், ராதிகா சரத்குமார் , யோகிபாபு ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்த திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான இசையை ஹிப்பாப் தமிழா அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது. இந்த படம் வரும் மே 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரோபோ ஷங்கர் சிவகார்த்திகேயன் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறார். மற்றவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துவார் என்று கூறினார். "பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடும் போது மட்டும் ஏன் பின் டிராப் சைலன்ட்டில் இருக்குனு எனக்கு தெரியல.. இதனால தான் நான் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடும் போது வருவதே கிடையாது" என்றார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ரோபோ ஷங்கருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களை எப்படி தரக்குறைவாக பேசலாம் என்று எதிர்ப்பு எழுந்தது இதனை அடுத்து பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி ஓடினார் ரோபோ சங்கர்.