இளம் வயதில் என்னை பலரும் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்..! பிரபல நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

கேங்க் ஆஃப் வாஸிபூர், மாஸான் போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் ரிச்சா சத்தா. இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில், ''இந்தியா போன்ற பாலின சமத்துவம் இல்லாத நாட்டில் கண்டிப்பாக மகளிர் தினம் போன்றவை தேவைப்படுகிறது. என்றைக்கு இந்தியாவில் ஆண், பெண் பேதமின்றி சமத்துவ சமூகம் தோன்றுகிறதோ, அன்றைக்கு இதுபோன்ற பிரத்யேக தினங்கள் அனுசரிக்க தேவையில்லை. இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் எப்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, நானே எனது சிறு வயதில் பலரால் ஏமாற்றப்பட்டுள்ளேன். முகம் பார்த்து பலரையும் நல்லவன் என நம்பிவிடுவேன். என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்வார்கள். உனக்கு திறமை உள்ளது, அது, இது என்றெல்லாம் கூறி ஆசையை நிறைவேற்றிக் கொள்வார்கள். பிறகு, அப்படியே கைகழுவி விடுவார்கள்.

இதெல்லாம் எனக்கு நீண்ட நாள் கழித்துத்தான் புரிந்தது. நம்மை அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்று உணர்ந்தபின், எனது சினிமா வாய்ப்பு தேடும் படலத்தை வேறு விதமாக மாற்றி அமைத்துக் கொண்டேன். தற்போது நான் உயரத்தில் உள்ளேன். என்னை ஏமாற்றியவர்கள் எல்லாம் கீழே உள்ளனர். அவ்வளவுதான் வாழ்க்கை. எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது.

இதுதவிர, பெண்களுக்கு நான் சொல்லும் மற்றொரு அறிவுரை நிறைய படியுங்கள். உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க கவனம் செலுத்துங்கள். புத்திசாலித்தனமாக வாழ்க்கையை  முன்னெடுத்துச் செல்லுங்கள்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.