தமிழன்டா..! தந்தை விஜயை பெருமைப்படுத்த மகன் சஞ்சய் செய்த செயல்..! என்ன தெரியுமா?

வெளிநாட்டில் படிக்கும் இளைய தளபதி விஜயின் மகன் குடியரசு தின விழாவை தமிழர் முறைப்படி உடையணிந்து கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இளைய தளபதியின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தினவிழாவில் சஞ்சய் வெளிநாட்டில் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சட்டையுடன் குடியரசு தினவிழாவை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

அங்கு உள்ள அனைவருக்கும் இனிப்பு மற்றும் சாக்லேட் கொடுத்துள்ளனர்.அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலர் நடிகர் ரஜினியின் மகனா இது ?தமிழர் கலாசாரத்தில் அவரது தந்தையை மிஞ்சி விட்டாரே !எனவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

தளபதியின் மகன் வெளிநாட்டில் படித்தாலும் அவர் தமிழ் பாரம்பரிய முறைகளை மறக்காமல் இருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் அவருடன் சேர்ந்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் பல்வேறு குறும்படங்களை தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் அதுவும் விஜய் ரசிகர்கள் பலராலும் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டு வருகிறது.