மனைவியின் தங்கை மகளை உல்லாசத்துக்கு அழைத்த விபரீதம்! சித்தப்பா உறவு முறை இளைஞரை தேடும் திருவையாறு போலீஸ்!

தஞ்சை மாவட்டத்தில் மனைவியின் தங்கை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவான சித்தப்பாவை போலீசார் தேடிவருகின்றனர்.


தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பூதலூர் தாலுகா கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிறுமி கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்ற்கு அவரது தங்கை கணவர் கோபிநாத் வந்துள்ளா.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தனியாக இருந்த மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோபிநாத் மாணவியிடம் சிலுமிஷம் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் விடாமல் மாணவியை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

ஆனாலும் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை தாயிடம் சொல்லிவிட்டார் மாணவி. இதனால அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் உறவினர்தானே என்று நம்பி வீட்டிற்குள் அனுமதித்தால் இதுபோன்று கேடுகெட்ட காரியம் செய்துள்ளாரே என வேதனை அடைந்து இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் காவல் ஆய்வாளர் மணமல்லி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சித்தப்பா கோபிநாத்தை தேடி வருகின்றனர்.