எப்படியாவது காப்பாத்தணும்..! மகள் பாடப் பாட...! டிவியில் பார்த்துக் கொண்டே உயிரை விட்ட தாய்! நெஞ்சை உலுக்கும் வீடியோ!

மகளின் பாட்டுபோட்டியை டிவியில் கண்டுகொண்டே தாய் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ பதிவு பார்ப்போர்களை கண்ணீர் விட வைத்துள்ளது.


இந்தோனேசியாவில் சிதி நூர் என்ற 14 வயது சிறுமியின் தாய் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இவரின் மருத்துவ செலவுக்கே பணம் இல்லாமல் வாடும் ஏழ்மையான குடும்பம் அது. இந்நிலையில், பாட்டு போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிறுமிக்கு பாட தெரியும் என்பதால், இதில் கலந்துகொண்டு கிடைக்கும் பணத்தை மருத்துவ செலவுக்கு பயன்படுத்தலாம் என பங்கேற்றார்.

அந்த சிறுமி இறுதிபோட்டி வரை சென்று விட்டதால், இறுதிப்போட்டியில் பாடுகையில் அந்த நிகழ்ச்சி டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை சிறுமியின் தாய் பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென சிறுமியின் தாய் படுக்கையிலேயே உயிரிழந்திருக்கிறார்.

இதில் மேலும் சோகம் என்னவென்றால் சிறுமி இறுதி போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.