வைரமுத்து மீது செக்*ஸ் புகார்..! சின்மயிக்கு நடிகை ராதிகா கொடுத்த திடீர் ஆதரவு! கோடம்பாக்கம் பரபரப்பு!

சென்னை: #MeToo சர்ச்சையை ஏற்படுத்திய சின்மயிக்கு சரியான ஆதரவு அளித்திருக்க வேண்டும் என, ராதிகா கவலை தெரிவித்துள்ளார்.


சினிமா பின்னணி பாடகி சின்மயி, தனக்கு பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை அளித்தார் என்று கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன்பேரில், சினிமாத்துறையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் அனைவரும் ஒவ்வொருவராக #MeToo என ஹேஷ்டேக் ஏற்படுத்தி, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதேசமயம், சின்மயி தெரிவித்த புகார் இன்னமும் தமிழக சினிமாத்துறையில் கனன்று கொண்டுள்ளது. இதனால், வைரமுத்துவிற்கு புதுப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி நடிகை ராதிகா சரத்குமார், என்டிடிவி தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்துள்ளார்.

''சின்மயிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது, எப்போது ஏற்பட்டது என்று தெரியவில்லை. உரிய நேரத்தில் அவர் அதனை வெளியே சொல்லியிருக்க வேண்டும். காலம் தாழ்த்தி, வெளியே சொன்னதால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு இல்லை என்றாகிவிடாது. அவரது பாதிப்பை புரிந்துகொண்டு நாம் அனைவரும் ஆதரித்திருக்க வேண்டும்.

ஆனால், பழைய சம்பவத்தை தற்போது பேசுகிறார் என்று கூறி, நாம் அவரை ஆதரிக்காமல் விட்டுவிட்டோம் ,'' எனக் குறிப்பிட்டுள்ளார். ராதிகாவின் அண்ணன் ராதா ரவி , சின்மயிக்கு எதிராகச் சண்டை போட்டு வரும் நிலையில், ராதிகாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.