தந்தி டிவியில் இருந்து பாண்டே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் உண்மையில் அவர் தந்தி டிவியில் இருந்து நிர்வாகத்தால் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரனுடன் ரகசிய டீலிங்! தந்தி டிவியில் இருந்து பாண்டே விரட்டப்பட்டதன் பின்னணி!

கடந்த 2012ம் ஆண்டு முதல் தந்தி டிவியில் பணியாற்றி வந்தவர்
ரங்கராஜ் பாண்ட. பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாண்டேவின் குடும்பத்தினர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செட்டில் ஆனது. தினமலர் பத்திரிகையின்
மூத்த செய்தியாளராக அனைவராலும் அறியப்பட்ட பாண்டேவுக்கு அப்போது முதலே தமிழகத்தின்
பிரபல அரசியல்வாதிகள் அனைவருடனும் பழக்கம் உண்டு.
இந்த பழக்கத்தின் மூலமாகவே எவ்வித தொலைக்காட்சி செய்திப் பிரிவு அனுபவமும் இல்லாமல் தந்தி டிவியில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பாண்டே பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பாண்டே தலைவர்களை பேட்டி எடுப்பது, ஆயுத எழுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, கருத்து கணிப்புகளை வெளியிடுவது என தந்தி டிவியின் ஸ்டார் ஆன்கர் ஆனார். இதன் மூலம் தந்தி டிவிக்கு அதிக வெளிச்சமும், பாண்டேவுக்கு மிக அதிக வெளிச்சமும் கிடைத்தது.
தந்தி டிவி – பாண்டே
என இரு தரப்புமே பரஸ்பரம் ஒருவர் மூலம் மற்றொருவர் பலன் அடைந்தனர். இருந்தாலும்
கூட தமிழகத்தில் வேறு எந்த நியுஸ் பிரசன்டருக்கும் கிடைக்காத அங்கீகாரம்
பாண்டேவுக்கு கிடைத்தது. இதன் மூலம் தந்தி டிவியில் பாண்டே வைத்தது தான் சட்டம்
என்றாகிப் போனது. ஆனாலும் கூட கடந்த சில மாதங்களாகவே பாண்டே – தந்தி டிவி நிர்வாக
இயக்குனர் பால சுப்ரமணியன் ஆதித்தன் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த
ஆறு மாதங்களுக்கு முன்பு கூட பாண்டே தந்தி டிவியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்
வெளியானது.
இதற்கு நிர்வாக
இயக்குனரான பாலசுப்ரமணிய ஆதித்தன் கூறியும் அதனை பொருட்படுத்தால் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒரு செய்தியை பாண்டே தந்தி தொலைக்காட்சியில்
ஒளிபரப்பியது தான் காரணம் என்று கூறப்பட்டது. எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களுடன்
சுமூக உறவை பேணும் தந்தி குழுமத்திற்கு, பாண்டே ஒளிபரப்பிய செய்தியாளல் அரசிடம்
சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக பாண்டேவை பணியில் இருந்து தந்தி நிர்வாகம் நீக்கியதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் பணி நீக்கம் சஸ்பென்டாக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து பாண்டே தந்தி டிவிக்கு பணிக்கு திரும்பினார். இந்த நிலையில் தான் பாண்டே தற்போது தந்தி டிவியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் பாண்டே ராஜினாமா செய்யவில்லை தந்தி நிர்வாகம் தான் பாண்டேவை பணி நீக்கம் செய்துவிட்டதாக மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.
அ.தி.மு.க இரண்டாக
உடைந்தது முதலே தினகரன் குரூப்புடன் பாண்டே நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே தந்தி டிவி நிர்வாக இயக்குனர் கூறியும் முதலமைச்சருக்கு
எதிரான செய்தியை பாண்டே ஒளிபரப்பியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா
எனும் நான் என்கிற நிகழ்ச்சி அண்மையில் தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இந்த
நிகழ்ச்சியில் சசிகலா மற்றுமி அவரது குடும்பத்தினருக்கு சாதகமான சில தகவல்கள்
இடம்பெற்றிருந்தன.
இதன் பின்னணியிலும்
பாண்டே – தினகரன் இடையிலான உறவே இருந்ததாக சொல்லப்பட்டது. எனவே தான் இனியும்
பாண்டேவை பணியில் வைத்திருக்க முடியாது என்று கருதி தந்தி நிர்வாகம் அவரை பணி
நீக்கம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.