இளைஞர்களுக்காக, தல அஜித் எதிர்கால திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்தால் அஜித் அவர் மீது கோபமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் கடும் கோபத்திற்கு ஆளான ரங்கராஜ் பாண்டே! படப்பிடிப்பில் பரபரப்பு!
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, சமீபத்தில் தந்தி டிவியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். இதன்பின், யூ டியூப் சேனல் நடத்தி வரும் அவர், வேந்தர் டிவியின் சிஇஓ பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தல அஜித்தின் புதிய படமான நேர்கொண்ட பார்வையில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது YouTube சேனலுக்கு தானே அளித்துள்ள பேட்டியில், ''நேர்கொண்ட பார்வை சூட்டிங்கில், அஜித்துடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை பற்றி சில விசயங்கள் தெளிவாக புரிந்தது. அவருக்கும், அரசியல் எதிர்பார்ப்புகள் பல உள்ளன. ஆனால், தனது கருத்துகளை நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
இதுதவிர, தமிழக இளைஞர்கள் உள்பட பலருக்கும் உதவி செய்யும் வகையில், சர்வதேச தரத்திலான விளையாட்டு பயிற்சி அகடமி ஒன்றை நிறுவ அவர் திட்டமிட்டுள்ளதாக, சிலரிடம் கூறி வருகிறார். இதனை நானும் நேரடியாக கேள்விப்பட்டேன். இதுதான் அவரது எதிர்கால திட்டம்,'' என்று ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே தன்னுடனான பழக்கத்தை அவரது சேனலுக்கு பயன்படுத்தும் தகவல் அஜித் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் ரகசியமாக பேசும் சில தகவல்களை பாண்டே வெளிப்படையாக கூறியது அஜித்தை டென்சன் ஆக்கியுள்ளது. இதனால் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பாண்டே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்று நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு குழுவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்அஜித்.
ஒரு பத்திரிகையாளராக தான் தனக்கு கிடைத்த தகவலை மிகவும் பாசிட்டிவாகவே வெளியிட்டுள்ளதாகவும் இதில் என்ன தவறு இருக்கிறது என்று சுற்றி இருப்பவர்களிடம் கேட்டு வருகிறாராம் பாண்டே.