1 மாதத்திற்கு 144 தடை! கூட்டமாக செல்ல கூடாது! வாடகை கார்களுக்கு அனுமதி இல்லை! பதற்றத்தில் ராமநாதபுரம்!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு, 144 தடை உத்தரவு பிறப்பித்து, ஆட்சியர் வீரராகவ ராவ் அதிரடி உத்தரவு வெளியிட்டுள்ளார்.


ஆண்டுதோறும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கம் குருபூஜை ஆகியவை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்போது ஜாதிக்கலவரம் ஏற்படும் அளவுக்கு பதற்றமான சூழல் ராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நிலவும்.

இதனை தவிர்க்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி அக்டோபர் 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக, ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.  

இந்த 2 மாதங்களிலும் பிற மாவட்டங்களில் இருந்து, வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.