இத்தனை நாளும் வாய் மூடி அமைதியாக இருந்தார் ராமதாஸ். ஏனென்றால், எதாவது ஏடாகூடமாக வாய் பேசி, அதனால் அ.தி.மு.க. கோபமாகி, தன் மகனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காமல் போய்விடுவோ என்று பயந்தார்.
நாடாளுமன்றத்தில் பேசுறதெல்லாம் ஒரு சாதனையா ஸ்டாலின்? வம்பிழுக்கிறார் ராமதாஸ்!

ஒருவழியாக இப்போது அன்புமணி ராஜ்யசபா எம்.பி. ஆகிவிட்டதால், ஒளித்துவைத்திருந்த பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்துவிட்டார். இனிமேல் ராமதாஸின் வீரத்தை எல்லோரும் பார்க்க முடியும் அளவுக்கு சீறுவார். இப்போது அவர் ஸ்டாலினைப் பார்த்து கேட்டிருக்கிறார். அதாவது, தமிழகத்தில் இருந்து போன எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்று கேட்பார்கள், இதோ அவர்களது சாதனை என்று பட்டியலிட்டார். அதற்கு ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
நீட்டுக்கு எதிரா டி.ஆர். பாலு பேசினார். அஞ்சல் துறைக்கு எதிராக தயாநிதி மாறன் பேசினார். ரயில்வே துறைக்கு எதிராக கனிமொழி பேசினார் அப்படின்னுதான் அவர் பட்டியல் போட்டிருக்கிறார். சொல்வது சாதனை இல்லை. செய்வதுதான் சாதனை. 78 வருடங்களாக முடங்கிக் கிடந்த மொரப்பூர் _- தருமபுரி தொடர்வண்டித் திட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வாங்கி, ரூ.358 கோடியை உடனடியாக ஒதுக்க வைத்தாரே அன்புமணி ராமதாஸ் ... அது தான் சாதனையாம்.
நீட் தேர்வை ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. பயிர்க்கடன்களையும், கல்விக் கடன்களையும் கூடவே நகைக்கடன்களையும் ரத்து செய்ய வைத்திருந்தால் அது சாதனை. அதை விடுத்து எங்காளுங்க பேசினாங்க என்பதெல்லாம் வெட்டிப் பேச்சுதானே என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடேங்கப்பா... என்னா பேச்சு பேசுறார் ராமதாஸ்... நல்ல வீரம்தான்.