கொள்கையா முக்கியம், கூட்டணிதான் முக்கியம்! வியாபாரியாக பேசிய ராமதாஸ்!

கொள்கைக்காக உயிர்விட்ட அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.


பதவி, பணம், செல்வாக்கு போன்றவற்றை கொள்கைக்காக விட்டுக் கொடுத்தவர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனா, கூட்டணி தர்மத்துக்காக எப்படிப்பட்ட படுபாதக செயலையும் நாங்கள் செய்வோம் என்று கெத்தாக கூறியிருக்கிறார் பா.ம.க. தலைவர் ராமதாஸ். ஆம், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இப்படித்தான் கூறியிருக்கிறார். 

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே ‘பா.ம.கவின் நிலைப்பாடு. ஆனால், நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை’ என்று விசித்திரமான ஒரு கருத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியபோது, ‘--கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்துதான் ஆகவேண்டும்’ என்றும் தடாலடியாகப் பேசியிருக்கிறார். அடேங்கப்பா, கூட்டணி தர்மம் என்பதை ராமதாஸ் எப்படியெல்லாம் கடைப்பிடிப்பார், எத்தனை முறை கடைபிடித்திருக்கிறார் என்று தெரியாதா என்று கிண்டல் செய்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்களும், கழக உடன்பிறப்புகளும். பா.ம.க. என்றால் சும்மாவா..?