சமீபத்தில் முத்தரசன், எஸ்றா சற்குணம் ஆகியோரை தாக்கி ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து முத்தரசன் மற்றும் எஸ்றா சற்குணத்தை தினமும் ஏராளமான நபர்கள் கேவலமான வார்த்தைகளுடன் திட்டித் தீர்க்கிறார்கள். இவை ராமதாஸ் அசைன்மென்ட் என்று சொல்லவே தேவையில்லை.
ராமதாஸ் உங்களுக்கு அய்யாவா? ஸ்டாலினை குதறும் சிறுத்தைகள்!

இந்த நிலையில், தி.மு.க. இதில் தலையிடவில்லை என்றால் பிரச்னை தீராது என்று கேட்டுக்கொண்டதால், இன்று ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சமுக நல்லிணக்கத்திற்காக உழைக்கும் முத்தரசன், எஸ்றா சற்குணம் ஆகியோர் பேசாத ஒன்றை பேசியதாக ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தேர்தலில் தோல்வி எல்லோருக்கும் பொதுவானது, அதற்காக இப்படி பேசி, தேவையில்லாமல் பதட்டமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ராமதாஸை அய்யா என்று அன்போடு ஸ்டாலின் அழைத்திருப்பதுதான் இப்போது சிறுத்தைகள் சீறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஏனென்றால், இதற்கு முன்பே திருமாவளவனை மட்டும் திட்டி ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அப்போது ஸ்டாலின் வாய் திறக்கவே இல்லை. இப்போது கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்தவ தலைவர்களைத் திட்டியதும் அறிக்கை கொடுத்திருப்பதை ஓரவஞ்சனையாக சிறுத்தைகள் பார்க்கின்றனர். அது மட்டுமின்றி, ராமதாஸ்க்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய கடிதத்தில் அய்யா ராமதாஸ் என்று அழைத்து பெருமைப்படுத்துவது எதற்கு என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
சரியாத்தான் கேட்குறாங்களா...?