வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான 93 சொத்துகள், அதாவது 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் சரஸ்வதி ராமதாஸ் ஏமாற்றி அபகரித்துள்ளதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வன்னியர்களின் ரூ.2 லட்சம் கோடி மதிப்புடைய சொத்துகளை ராமதாஸ் குடும்பம் அனுபவிக்கிறது! வெளியானது திடுக் புகார்!
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வன்னியர் சமூகத்திற்கு பா.ம.க., எதையும் செய்யவில்லை. வன்னியர் சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்பவர் ராமதாஸ். வன்னியர் சொத்துகளை அபகரித்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
வன்னியர்களுக்கான மத்திய அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய இட ஒதுக்கீடு தொடர்பாக எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், வாய்ப்பு கிடைக்கும் போது தனது மகனை அமைச்சராக மாற்றினார் என்றார்.
காடுவெட்டி குரு சிகிச்சையில் இருந்த போதும் கூட, எந்த உதவியும் செய்யவில்லை எனவும் வன்னியர் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
வன்னியர் சமூக மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சொத்துக்களை மீட்க 2013யில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முடிந்து சொத்துக்கள் நீக்கப்படும் தருவாயில் உள்ளது.
ஏற்கனவே வன்னியர் சமூக மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கிய ராமசாமி படையாட்சியார் சிலையை திமுக தான் சென்னையில் வைத்தது. எனவே இந்த தேர்தலில் திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது என்றும், எதிர்பார்க்கக் கூடிய காலகட்டத்தில் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களுக்கு அவர்களுக்கான கோரிக்கையை திமுக நிறைவேற்றும் என நம்பிக்கை இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த தேர்தலில் ராமதாசுக்கு வன்னியர் சமூகம் உட்பட மக்கள் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
ராமதாஸ் தரப்பில் இருந்து பல அச்சுறுத்தல் வந்துள்ளது; ராமதாஸ் சமூகத்தில் ஒரு கேன்சர்; அவரை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.