ராமபிரானின் வாரிசுகள் வந்துட்டாங்கப்பா! டி.என்.ஏ. டெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் தினந்தோறும் நடந்து வருகிறது.


அதில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற விசாரனையில் ராமன் பிறந்த ரகுவம்சத்தின் தொடர்ச்சி இப்போதும் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.அதைதொடர்ந்து முன்னால் உதய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும்,ராஜஸ்தானின் புகழ் பெற்ற மேவார் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜஸ்தான் போக்குவரத்து துறை அமைச்சர் அர்விந்த் சிங் மேவார் இந்த அதிரடி செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

நாங்கள் ராமனின் வழி வந்தவர்கள் என்பது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்தவிதமான உரிமையும் கோர விரும்பவில்லை.ஆனால் அயோத்தியில் ராமஜென்ம பூமி கோவில் கட்டப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.அடுத்தபடியாக பிரதாப்சிங் கச்சேரியவாசும் ,சூரியவம்ச ராஜ்புத்களான நாங்கள்தான் ராமன் வழி வந்தவர்கள் அதில் மாற்றுக் கருத்தே இல்லை என்று சொல்லும் பிரதாப்சிங் தங்களது குடும்பம் உட்பட உலகமெங்கும் ராமனின் வாரிசுகள் இருப்பதாக சொல்லி தனது பெருந்தன்மையை காட்டி இருக்கிறார்.

தேவைப் பட்டால் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.இவருக்கு முன்பே ஜெய்பூர் அரசகுடும்ப வாரிசும் பிஜேபி எம்.பியுமான திவ்யகுமாரி தங்களது குடும்பம் ராமனின் இரண்டாவது மகனான குசன் வழி வந்தது என்று ஏற்கனவே ஒரு குண்டை வீசி இருக்கிறார்.இதற்குத் தேவையான ஆவணங்கள் ,வம்சாவளி சரித்திரம் குறித்த எல்லா தகவல்களும் அரசகுடும்பத்தில் தயாராக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.அடுத்து ராமனின் டி.என்.ஏ விபரங்களே இருப்பதாக யாராவது கிளம்பாமல்.இருந்தால் சரி.