தமிழக அரசின் பட்ஜெட்டில் சர்ச்க்கு 5 கோடியும், மசூதிக்கு 5 கோடியும் பழுதுபார்க்க ஒதுக்கியுள்ளதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன்.
இந்துக்கள் என்றால் கேவலமா? எடப்பாடியை தாக்கும் ராம.கோபாலன்
மசூதிக்கோ, சர்ச்க்கோ வருகின்ற நிதி, வருமானம் எவ்வளவு என்பதுகூட தெரிந்துகொள்ளாமல், தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதேசமயம், இந்து கோயில்களின் சொத்துக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துள்ள தமிழக அரசு, கோயில் நிலங்களை பட்டாப்போட்டு கொடுக்கவும், நாத்திகவாதி அண்ணாதுறையின் இறந்த நாளைக்கு சமபந்தி போஜனம் போன்றவற்றால் சீரழிக்கவும் செய்கிறது.
அரசு எடுத்துக்கொண்ட பின்னர், பத்தாயிரம் கோயில்களை காணவில்லை, பல லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் களவாடப்பட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இறைவன் திருமேனிகள், பஞ்சலோக விக்கிரகங்கள், ஆபரணங்கள் கொள்ளைபோயுள்ளன.
இதற்கெல்லாம் துணைபோனவை தான் திமுக, அதிமுக கட்சிகள். கோயிலை அழித்து, இந்து சமய நம்பிக்கைகளை சீர்குலைக்கும் பணியைத்தான் செய்து வருகின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் சிதலமடைந்து கேட்பாரற்று அநாதைகளாக கிடக்கின்றன. 5,000க்கும் அதிகமான கோயில்களில் விளக்கெரிய எண்ணைகூட இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. சில ஆயிரம் கோயில்களில் கிடைக்கும் அபரிதமான வருமானத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்கள் பணிபுரிகிறார்கள். இப்படியே போனால், நாளை கோயில்களில் உள்ள திருமேனிகளை அகற்றிவிட்டு, சர்ச்சாக, மசூதிகளாக தமிழக அரசே மாற்றிக்கொடுத்துவிடும் என அஞ்சுகிறோம்.
தமிழக அரசு ஆலயத்தை விட்டு வெளியேற்றவும், ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் பாதுகாக்கவும் வலியுறுத்த இந்து சமுதாயத்தை, ஆன்மிக அமைப்புகளை, ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மீகப் பெரியோர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும், தமிழக அரசியல்கட்சிகளும் இதுபோல் ஓட்டு வங்கி அரசியலுக்கு இரட்டை நிலைப்பாட்டு எடுப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளார் ராம.கோபாலன்.