யாருக்கு ராஜ்யசபா எம்பி? அதிமுகவில் குஸ்தி ஆரம்பம்!

ராஜ்யசபா எம்பி ஆகும் விவகாரத்தில் அதிமுகவிற்கும் மோதல் வெடித்துள்ளது.


வரும் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்பி க்கள் பதவி காலியாகிறது. தற்போது சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தலா 3 ராஜ்யசபா எம்பி களை பெற முடியும். அதிமுகவைப் பொறுத்தவரை 2 எம்பி பதவிகளை அக்கட்சியும் ஒரு எம்பி பதவியை பாமக ஏற்கும் கொடுக்க வேண்டும். எனவே அந்த 2 எம்பி பதவியை பெற தற்போது முதலே அதிமுகவில் ஆரம்பமாகியுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ராஜ்யசபா எம்பி ஆகும் கனவில் உள்ளார். இதைப்போல் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரும் ராஜ்யசபா எம்பியாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் தவிர அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் வலம் வரும் நிர்மலா பெரியசாமி, வைகைச்செல்வன் ஆகியோரும் ராஜ்யசபா எம்பியாக காய் நகர்த்தி கின்றனர்.

இவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து ராஜ்யசபா எம்பியாக முயன்று வருகின்றனர். அதேசமயம் ஓபிஎஸ் மற்றும் eps தங்களுக்கு நெருக்கமானவர்களை ராஜ்ய சபாவிற்கு அனுப்பி டெல்லியை தங்கள் தொடர்பில் வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்கின்றனர்.

இதனால் ராஜ்யசபா எம்பி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது உள்ளுக்குள் வெடித்திருக்கும் முதல் வெளிப்படையாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.