இந்திய போர் கப்பலில் ராஜீவ் காந்தி உல்லாச பயணம்! மோடி பற்ற வைத்த தீ உண்மையா?

இந்திய கடற்படை கப்பலை தன்னுடைய ஜாலிக்காக ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் என்ற விவகாரம் இப்போது பரபரப்பாக மாறியுள்ளது. ஏற்கெனவே அவரது மரணத்தைப் பற்றி எழுப்பிய கேள்வி, மோடிக்குத்தான் சிக்கலை உருவாக்கியது.


இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் உல்லாசப்பயண விவகாரம் காங்கிரஸ்காரர்களையே அதிர வைத்துள்ளது. ஏனென்றால் மோடியின் குற்றச்சாட்டு உண்மைதான்.  லட்சத்தீவு அருகே, கொச்சியிலிருந்து 465 கிலோ மீட்டர் தொலைவில் பங்கராம் என்ற தீவு உள்ளது. இங்குதான் ராஜீவ் காந்தியும் அவரின் நண்பர்கள் சிலரும் உல்லாசப்பயணம் சென்றுள்ளனர். அந்த தீவுக்குச் செல்வதற்கு ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார் என்பதுதான் மோடியின் குற்றச்சாட்டு.

ராஜீவ் காந்தி லட்சத்தீவுக்கு விராட் கப்பலைப் பயன்படுத்திய போது, விராட் தன் பாதுகாப்பு கப்பல்களுடன்தான் அங்கே சென்றுள்ளது. விராட் போர்க்கப்பலை தன் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியது வெளியே தெரிந்து சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து, செலவுத் தொகையை ராஜீவ் காந்தியே செலுத்த வேண்டுமென்று சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அந்த விவகாரம் அடங்கிப்போனாலும், இப்போது தேர்தல் நேரத்தில் சரியானபடி எடுத்துப் போட்டுள்ளார் மோடி.

இதுவரை ராஜீவ்காந்தியை திட்டவேண்டாம் என்று மோடிக்கு தடை போட்ட பி.ஜே.பி.யினரே இப்போது, இந்த விவகாரம் நன்றாக ஒர்க் அவுட் ஆவதாக தெரிவிக்கவே, மோடி ரொம்பவும் ஹேப்பியாம் அண்ணாச்சி.