நாளைக்கே வீடு பாருங்க! நானே வாங்கி கொடுக்கிறேன்! ஹீரோவாக்கிய தயாரிப்பாளரை நெகிழ வைத்த ரஜினி!

பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு சொந்த வீடு வாங்கித் தர உள்ளதாக உறுதி அளித்தார்.


பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் கலைஞானம் வாடகை வீட்டில் வசிப்பது தற்போதுதான் தெரியும் என்றும் அதனால் தாம் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அரசு கலைஞானத்திற்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று கேட்டார்கள். அந்த கஷ்டம் அரசுக்கு வேண்டாம்.

நானே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருகிறேன். நாளையே வீடு பாருங்கள். அவர் உயிர் சொந்த வீட்டில் தான் போக வேண்டும். புராண சரித்திர கதைகளை படமாக்கியதால் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது.

மலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும் என மேடையில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.  தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் பெயர்களை முன்னிலைப்படுத்தி போடுவதை போல கதாசிரியர்கள் பெயரையும் முன்னிலைப் படுத்தி டைட்டில் போட்டு கவுரவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் கலைஞானத்தை பற்றி தெரியாத கலைஞர்களே கிடையாது என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் கதையில் ஏதேனும் சிக்கல் எற்பட்டால் அவரைத்தான் தொடர்பு கொண்டு தெளிவு பெறுவார்கள் என பெருமிதமாக பேசினார். மேலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நான் முதன் முதலாக பைரவி படத்தில் கிரேட் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறும் அளவுக்கு தன்னை கதாநாயகனாக முன்னிலைப்படுத்தியவர் கலைஞானம் என தெரிவித்தார் ரஜினிகாந்த்.

எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும் என்னை தலைவரே என அழைக்கும் பாராதிராஜா கலைஞானத்திற்கு பாராட்டு விழா எடுத்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது என கூறிய ரஜீனி பணம், புகழ் சம்பாதிக்கலாம் பழைய நண்பர்களை அவ்வளவு எளிதில் சம்பாதிக்க முடியாது என தெரிவித்தார்.

ஒரே ஒரு படத்தில் கலைஞானத்துடன் பணியாற்றியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த் கதாசிரியர் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து ஆசீர்வாதம் பெற்றார்.