அதிமுகவுக்கு தலைவராகும் ரஜினி? - மோடி - ஷா கூட்டணியின் பலே பிளான்!

தலைவர் இல்லாத கட்சியை பா.ஜ.க. சொந்தம் கொண்டாடப் பார்க்கிறது என்பதுதான் அ.தி.மு.க. தலைவர்களின் அலறல் குற்றச்சாட்டு. எடப்பாடி அரசு நடந்துவருவதாக சொல்லப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு நகர்வையும் பா.ஜக.தான் திட்டமிடுகிறது.


ஆனால், இந்தத் தேர்தலில் மட்டும் எடப்பாடியை நம்பி ஏமாந்துபோனது. நான் தேர்தல் ஸ்பெஷலிஸ்ட், பா.ஜ.க.வின் ஐந்து பேரையும் ஜெயிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு என்றுதான் அமித் ஷாவிடம் சொல்லியிருந்தார் எடப்பாடி. அவரது நல்ல மனதை நம்பி அப்படியே பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், அத்தனையும் அவுட்.

இப்போது அடுத்தகட்ட திட்டம் தயாராகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரவேண்டும் என்று யோசிக்கிறார்கள். அதற்காக அவர்களுடைய நீண்ட நாள் திட்டம்தான் ரஜினிகாந்த். அவர் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அ.தி.மு.க.வில் நல்ல கட்டமைப்பு இருக்கும்போது, எதற்காக இன்னொரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்கிறது பா.ஜ.க.

ரஜினியும் எம்.ஜி.ஆர். ஆட்சிதான் கொடுக்கப்போவதாக சொல்லிவருகிறார். அதனால் எம்.ஜி.ஆர். ஆட்சி என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் ரஜினியை அ.தி.மு.க. கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இப்போது எடப்பாடி, பழனிசாமி இருவரும் பா.ஜ.க.வின் கைப்பாவைகள். அதனால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்தத் திட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும்.

அது ரஜினிதான். சொந்த உழைப்பில் வெற்றி பெற ஆசைப்படுவாரா அல்லது அவரையும் மிரட்டி தலைவராக மாற்றுமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.