கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்! பாஸ்போர்ட்! விமானத்தில் மிஸ்ஸிங்! லண்டனில் தடுத்து வைக்கப்பட்ட ரஜினி மகள்-மருமகன்!

சென்னையில் இருந்து லண்டன் சென்ற ரஜினிகாந்த்தின் மருமகன் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதனால் எமிரேட்ஸ் அதிகாரிகளிடம் பதில் சொல்ல முடியாமல் சிக்கித் தவித்தார்.


சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது கணவர் கோவையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விசாகன். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு சௌந்தர்யாவும் விசாகனும் லண்டனுக்கு சுற்றுலா சென்றனர். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

எமிரேட்ஸ் சேவை மையத்தில் தனது பாஸ்போர்ட்டை தேடியபோது அது பிரிப்கேசுடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விமானத்திலும் அந்த பை இல்லை. பாஸ்போர்ட் மட்டுமின்றி அந்த பையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் இருந்தாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புகாரை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருவரையும் தங்க வைத்துவிட்டார்கள். இதையடுத்து தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் விசாகன், சௌந்தர்யா இருவரும் ரஜினிகாந்த்தின் மருமகன், மகள் என தெரியவந்துள்ளது. பின்னர் ரஜினிகாந்த்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் லண்டன் நண்பர்களை உதவுமாறு கேட்டுக் கொண்டார் 

பின்னர் டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டனர். லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் இரண்டு மணிநேரம் கடும் பரபரப்பு நிலவியதாகத் தகவல்கள் கூறுகின்றன. விசாகன் அளித்த புகாரை அடிப்படையாக வைத்து அவருடைய கைப்பையைத் திருடியவர் யார் என்று சிசிடிவி கேமரா மூலம் ஆராய்ந்து வருகிறது லண்டன் காவல்துறை.