வைரலான ரஜினியின் இதுவும் கடந்துபோகும்..! பரிசு குறித்து ரஜினி பேச்சு

கொரோனா பற்றி ரஜினி எதுவுமே பேசவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் சேர்த்து, கொரோனா விழிப்புணர்வு செய்திகளும் கூறியிருக்கிறார் ரஜினி.


இன்று இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரஜினி தெரிவித்திருக்கும் வீடியோ வாழ்த்து செய்தியில், நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் வீட்டுக்குள் இருங்கள். அதுதான் நீங்கள் உங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கும் மிகச்சிறந்த பரிசு என்று தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இதுவும் கடந்துபோகும் என்பது இன்று வைரலாக மாறிவிட்டது. கொரோனா முடிந்தவுடன் கட்சி, ஆட்சியும் நமக்குத்தான் என்று மீண்டும் ரஜினி ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.