இப்தார் நோன்பு! கடலூரை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்!

கடலூர். ஜூன். 2.கடலூர் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக 27ஆம் நாள் ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்( வடக்கு) மாவட்ட செயலாளர், பொறியாளர் எஸ். ரவி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் ரஜினிபிரபாகர் முன்னிலை வகித்தார்.


இந்த நிகழ்ச்சியில் கடலூர் நகர செயலாளர் தாயுமான்ஒன்றிய செயலாளர் அய்யனார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகர் ,விவசாய அணி செயலாளர் ரவி ,சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், ஆரோக்கிய தாஸ்.வர்த்தக அணி செயலாளர் பாலமுருகன் ,மருத்துவரணி செயலாளர் டாக்டர். நடராஜன், மற்றும் கடலூர் நகரம் பழனிவேல், அப்பு, சீனு, வேல்முருகன், முஸ்தபா, பன்னீர், கடலூர் ஒன்றியம் பத்மநாபன், கிருஷ்ணராஜ், அம்பேத்கர், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் தக்ஷிணா மூர்த்தி, பாபு( என்கிற) முருகன், 

பிரகாஷ், பாபு, கார்த்திகேயன் கடலூர் அனந்தநாராயணன், மணவாளன், சங்கர் ஜெயராஜ் இளைஞரணி சுதாகர், ராஜா, வினோத், குணா, அண்ணாகிராமம் ஒன்றியம் சாமிவேல் மகளிர் அணி சத்யா ,வெங்கடேஷ் பாபு, ராஜ்குமார்,ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கடலூர் நகர நிர்வாகி முஸ்தபா சிறப்பாக  செய்திருந்தார்.