சங்கிலியால் கட்டப்பட்ட இளம் பெண்! கணவனின் உறவினர்கள் அடுத்தடுத்து அரங்கேற்றும் கேவலமான செயல்! பதற வைக்கும் சம்பவம்!

பிரதாப்கார்: இளம்பெண்ணை அவரது உறவினர்களே இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டுவிட்டு, பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சனிக்கிழமையன்று ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி ஆட்சியர் விசாரித்தபோது, ஒரு அதிர்ச்சிகர விசயம் தெரியவந்தது.

அங்குள்ள, பீபால் குந்த் என்ற கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவருக்கு, 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த பெண்ணை, அவரது கணவர் மற்றும் மைத்துனர்கள் ஒன்று சேர்ந்து இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அவரை அனைவரும் மது அருந்திவிட்டு அடித்து சித்ரவதை செய்வதோடு, பலமுறை பலாத்காரமும் செய்து வந்திருக்கிறார்கள். 

குடும்பத்தினரின் தொல்லை தாங்காமல் தாய்வீட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றதால் இப்படி இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துவருவதாக, அந்த பெண், வீடியோ ஒன்றில் புகார் அளித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டதன் விளைவாக, பிரதாப்கார் மாவட்ட மக்கள் ஒன்றுசேர்ந்து வந்து, மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர். இதன்படி, நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.