ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இளம்பெண் அவரது கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
உன் மகனை கொன்றுவிட்டேன்! சடலத்துடன் நள்ளிரவில் சுடுகாட்டிற்கு ஓடிய மனைவி! கணவனுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்த பகீர் தகவல்!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கும் நவீதா மீனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இந்நிலையில் இவர்களுக்கு தற்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அடிக்கடி இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றத்தின் மூலம் முழுமையாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதையடுத்து தனது இரண்டு குழந்தைகளையும் நவீதா தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனது கணவர் திருந்தி தன்னிடம் மன்னிப்பு கேட்பார் என்ற எண்ணத்தில் நவீதா இருந்துள்ளார்.
ஆனால் நாட்கள் செல்ல தனது கணவர் திரும்பி வராத நிலையில் ஆத்திரம் அடைந்த நவீதா தனது கணவருக்கு நள்ளிரவில் இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது வாட்சப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதைப்பார்த்த ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காண வந்துள்ளார். இதையடுத்து நவீதா தனது 3 வயது இளைய மகனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் தனது மூத்த மகனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மேலே அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது தற்கொலை செய்து கொள்ள மனமில்லாமல் கீழே இறங்கி வந்துள்ளார்.இதையடுத்து வீட்டில் இறந்து கிடந்த தனது சிறிய மகனை உடலை மறைப்பதற்காக எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றுள்ளார்.இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஏன் மகனை சுடுகாட்டிற்கு தூக்கி செல்கிறாய் என கேட்டனர் அதற்கு பதட்டமாக இருந்த நவீதா மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது இதையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணையில் தன் மகனை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அங்கு சோதனை செய்த காவல்துறையினருக்கு தனது கணவர் தனது வாழ்க்கையையே சீரழித்துவிட்டார் மற்றும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் அவரது கணவரையும் காவல்துறையினர் அழைத்து அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் நவீதா அனுப்பிய குறுஞ்செய்தியை தனது மொபைலில் அளித்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதை ஸ்கிரீன்ஷாட் செய்து வைத்திருந்துள்ளார் ரமேஷ். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நவீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.