கட்டுக்கட்டாக வரதட்சணை பணத்துடன் வந்து நின்ற மாமனார்! மருமகன் சொன்ன ஒரே வார்த்தை! நெகிழ்ந்த திருமண வீடு!

ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் திருமணம் என்று சொல்லும் சமூகத்திற்கு மத்தியில் இளைஞர் ஒருவர் 11 ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஜிதேந்திரா சிங் என்பவர் வரதட்சனை வாங்குவதையும், கொடுப்பதையும் எதிர்க்கும் கொள்கை கொண்டவர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் மணமேடையில் ஜிதேந்திரா சிங்கிற்கு 11 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்கினர்.

உடனே அந்த பணதை மரியாதைக்கு வாங்கிக்கொண்டு பெண்ணின் தந்தையிடமே திருப்பித் தந்தார். பின்னர் அவர்களிடம் இருந்து 11 ரூபாய் மட்டும் அன்பின் பரிசாக பெற்றுக்கொண்டார். இதனால் ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர், முதலில் அவர் பணம் வாங்க மறுத்தபோது குறைவான வரதட்சணை கொடுப்பதால்தான் என கருதினர். ஆனால் அவருக்கு உண்மையிலேயே வரதட்சணை பிடிக்காது என்பதை பின்னர் தெரிந்து கொண்டு நெகிழ்ந்தனர். 

இது குறித்து மணமகன் ஜிதேந்திரா தெரிவித்தபோது தான் விரும்பியபடியே தன்னுடைய மனதிற்கு ஏற்றாற்போல் ஒரு பெண் மனைவியாக அமைந்திருப்பதால் பணம் எதற்கு என வினவினார்.

இந்த விஷயத்தை பெண்ணின் பெற்றோருக்கு ஆச்சரியம் தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் வரதட்சணை வாங்க ஒப்புக்கொண்டு மணமேடையில் திருப்பி தந்ததாக ஜிதேந்திரா பெருமையாக கூறுகிறார். ஜிதேந்திராவிடம் அவரது மாமனார் பணம் தரும் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இவ்வளவு பணம் வரதட்சணையாக மக்கள் நிறைந்த சபையில் பெறுவதால் நாளை ஏதேனும் பிரச்சனை வருமோ என்று கருதி முதலில் திருமண மண்டபத்தில் மறுத்துவிட்டு பின்னர் வாங்கிக்கொண்டாரா என்றெல்லாம் கேட்கவேண்டாம். அது நமக்கு தேவையில்லாத விஷயம். மணமகனுக்கு விளம்பரம் கிடைத்தாயிற்று. அவ்வளவுதான்.