ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு வழிப்பாடின் போது காற்று வீசி மேற்க்கூரை பெயர்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
மதப் பிரார்த்தனை கூட்டத்தில் கோர விபத்து! பந்தல் சரிந்து 14 பேர் பலி! அதிர வைத்த சம்பவம்!
ஜெய்ப்பூரை அடுத்த பார்மர் மாவட்டம் ஜெய்சோல் கிராமத்தின் பள்ளி வளாகத்தில் குறிப்பிட்ட மதம் ஒன்றின் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது .எதிர்பாரத விதமாக மைதானத்தில் அமைக்கபட்ட இரும்பு மேற்க்கூரை புயல்க் காற்றினால் பெயர்ந்து விழுந்ததில், 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பாரத பிரதமர் மோதி பாதிக்கபட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், தேவையான மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறும் எனவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.