வேலூர் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில்,நேற்று கே.வி குப்பம் பகுதியில் பரப்புரை ஆற்றினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
எடப்பாடிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்கிறார் ராஜேந்திர பாலாஜி - ஏன்னு தெரியுமா?

பாலாறு,கச்சத்தீவு, காவிரி எல்லா பிரட்சினைகளையும் அதிமுக சட்டரீதியாக எதிர் கொண்டு தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் என்று சொன்ன அமைச்சர் ,மேலும் பேசும்போது,திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, மதுரை லீலாவதி,முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்கு திமுக உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.இதற்குப் பிறகுதான் அந்த அதிர்ச்சி தகவலையே வெளியிட்டார்.
முதலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஸ்டாலின் தரக்குறைவாகப் பேசுவதை வழக்கம்போல கண்டித்த பால்வளத்துறை அமைச்சர் அடுத்துச் சொன்ன குற்றச்சாட்டு திமுக தொண்டர்களை மட்டுமல்ல கூடியிருந்த ரத்தத்தின் ரத்தங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டம்,எட்டு வழிச் சாலை அல்லது சேலம் சென்னை அதிவிரைவு சாலை,இன்னும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற திட்டங்களை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நடத்தும் போராட்டங்கள் அனைத்திலும் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது என்ற ராஜேந்திர பாலாஜி
ஸ்டாலின் நடத்தும் எல்லாப் போராட்டங்களிலும் வெளிநாட்டுச் சதி இருப்பதாக சொல்லி அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கிவிட்டு, 'அதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு தரவேண்டும்' என்று சொன்னதைக் கேட்டு எடப்பாடியே அதிர்ந்திருப்பார் என்கிறார் ஒரு வேலூர் ரத்தத்தின் ரத்தம்.