பிரபல ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசா தனது கையில் பொரித்திருந்த முன்னாள் காதலரின் பெயரை அளித்து கணவருக்காக புதிய டேட்டாவாக மாற்றிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜா ராணி அல்யா கையில் முன்னாள் காதலன் பெயர்! கணவன் வந்த பிறகு என்ன செய்தார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி. இதில் நடிகையாக நடித்த ஆலியா மானசா குறிப்பிட்ட காலங்களிலேயே பல தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் அதே சீரியலில் நடித்த சஞ்சீவ் என்கிற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு முன் ஆலியா மானசா நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சண்டையினால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் திருமணமான ஆலியா மானசா தனது கையில் பொரித்து வைத்திருந்த முன்னாள் காதலரின் பெயரை பாதி அளவு அளித்து வேறுமாதிரியாக மாற்றி புதியதாக குத்திக்கொண்டார். இது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.