இன்னொரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு சிக்கல்! தலைமை கழகத்தை பூட்டுவோம்' பொங்கும் தொண்டர்கள்!

அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர்.இவருக்கு முன் இந்தப் பதவியை வகித்த வி.பி கலைராஜன் இங்கிருந்து தினகரன் அணிக்குத்தாவி அங்கிருந்து இப்போது திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.


இதையடுத்து தி.நகர் எம்.எல்.ஏவான சத்யா அந்த பதவிக்கு வந்தார்.கடந்த வாரத்தில் அதிமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரே சமையத்தில்,400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளை மாற்றினார்.

இதைத் தொடர்ந்து சத்தியாவால் பாதிக்கப் பட்டவர்கள் கடந்த 27ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர்.விபரம் அறிந்த எடப்பாடி அதிருப்தி நிர்வாகிகளை அழைத்துப் பேசி வேலூர் பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் பழைய நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி தருவதாக வாக்களித்ததால் பூட்டுப் போடும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால்,வேலூர் தேர்தல் முடிந்த பிறகும் நடவடிக்கை இல்லாததால் நேற்று நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள்,தலைமைக் கழகத்தை முற்றுகயிட வந்தனர்.அவர்களை போலீசார் தடுத்து, முன்னாள் கவுன்சிலர் முகமதலி ஜின்னா,விஜயராமகிருஷ்ணா,கருணாகரன், வழக்குரைஞர் ராஜ் குமார் ஆகியோரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

அவர்கள் தலைமைக்கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.அவர்களோடு தொலைபேசியில் உரையாடிய ஒபிஎஸ் வருகிற 14ம் தேதி கூடும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் இது பற்றி முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்தாராம். ஆனால்,பெயர் வெளிப்படுத்த விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறும் போது' சாதாரண பொறுப்பில் இருந்த சத்யா எப்படி மாவட்டச் செயலாளர் பதவி வாங்கினார் என்று விசாரிக்க வேண்டும்.

இன்றைய தலைமைக்கும் சத்யாவுக்கும் இடையே பல ரகசியங்கள் இருக்கின்றன. அவை வெளியே வரவேண்டும்.தி.நகர் சத்யாவை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஜெயலலிதா சமாதி முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்குவோம் என்று தெரிவித்தார்.