அத்திவரதரை மூழ்கடித்த மழை..! ஆன்மிக அதிசயம்

அத்திவரதர் நீர்நிலைக்குப் போன தினத்தன்று நடந்த அற்புதத்தை, யாரும் எதிர்பாராத ஆன்மிக அதிசயமாக போற்றப்படுகிறது. ஏனென்றால், அத்திகிரி வரதர் வைபவம் நடப்பதற்கு சில நாட்கள் முன், திருக்கோயிலை சேர்த்த ஒரு வைஷ்ணவ பெரியவர் இப்படி சொல்லியிருந்தார்.


“அனந்த சரஸ் குளத்து நீர் முழுவதையும் வெளியேற்றி பெருமாளை வெளியே எடுப்போம், பிறகு நாற்பத்தியெட்டு நாட்கள் கழித்து வைக்கும் போது மழை நீர் வந்து தானாகவே குளம் நிறையும்”.

தானாக குளம் எப்படி நிரம்பும், மழை எப்படி வரும் என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். யாரும் இதை நம்பவில்லை நம்பிக்கை இல்லாமல்தான்  இருந்தனர்

ஆனால், ஆதி அத்திகிரி வரதர் வைபவம் முடிந்து, அனந்த சரஸ் திருக்குளத்தில் அத்திவரதரை எழுந்தருளச் செய்த நேர்ந்தபோது, கடும் மழை பெய்தது. நாள் முழுவதும் நல்ல மழை. அத்திவரதர் மீது மழை பொழிந்து, தனக்கான தண்ணீரை அவரே தேடிக்கொண்டார்.

இந்த செயலைக் கண்டு பக்தர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்த தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது மட்டுமின்றி காஞ்சிபுரம் குளமும் மளமளவென நிரம்பிவருகிறது. ஆஹா, ஒன்றா இரண்டா அத்திகிரி வரதர் புகழ் என்று பக்தர்கள் ஆச்சர்யத்தில் திளைக்கிறார்கள்.

ஆச்சார அனுஷ்டானங்கள் சரியாக நடக்கும் பொழுது, நடப்பவை எல்லாம் சரியாகவே நடக்கும் என்பது இந்து தர்மத்தின் கோட்பாடு. யாகசாலைகளில் கணீரென்று ஒலிக்கும் இந்து தர்ம வேத பாராயணத்தின் ஒவ்வொரு அட்சரத்துக்கும் தன்னை தானே காத்துக்கொள்ளும் சக்தி உண்டு இந்து தர்மம் வாழ்க என்று குரல் எழுப்புகிறார்கள்.