ரயில் முன்பதிவு திடீர் நிறுத்தம்..! எப்போது வரை தெரியுமா?

ஏப்ரல் 30 வரை அனைத்து முன்பதிவுகளையும் நிறுத்தி வைப்பதாக தனியார் ரயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் 3 தனியார் ரயில் நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பயண முன்பதிவை நிறுத்தி வைப்பதாகவும். ஏற்கனவே இந்த தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் கட்டணங்கள் முழுவதையும் திருப்பியளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி. அகமதாபாத் மும்பை இடையே இயங்கும் தேஜஸ் விரைவு ரயில், டெல்லி லக்னோ இடையே இயங்கும் காசி மகாகள் விரைவு ரயில் மற்றும் வாரணாசி இந்தோர் இடையே இயங்கும் பயணிகள் ரயில் ஆகிய இந்த மூன்று தடங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் இயக்கிவரும் தொடர்வண்டி பயணத்தின் முன்பதிவுகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தடங்களில் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை எனவும். இதுதொடர்பான அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கடந்த சனிக்கிழமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையின் கீழ் இயக்கப்படும் அனைத்து புறநகர் மற்றும் மெட்ரோ சேவைகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு போக்குவரத்து மட்டுமே தற்போது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

கொரோனா வைரஸுக்கு எதிரான தேசிய அளவில் மருத்துவ வசதிகளை அதிகரிப்பதற்காக, ரயில் பெட்டிகளில் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது பற்றி ரயில்வே அமைச்சகத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து 4,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் சுமார் 2500 பயிற்சியாளர்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வார்டுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் தனியார் தொடர்வண்டி சேவைகள் வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வந்துள்ள செய்தியால். இந்த ஊரடங்கு காலம் இன்னும் நீட்டிக்கப்படுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.