வெள்ளக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணப் போகிறாராம் ராகுல்காந்தி..? துப்புறியும் நிபுணர் ராஜேந்திர பாலாஜி தகவல்!

நமக்கு வாய்த்த அமைச்சர்களுக்கு திறமை இருக்கிறதோ இல்லையா, நன்றாக பேசுகிறார்கள்.


வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்தோ என்னவோ, ஜெயலலிதா அமைச்சர்கள் அத்தனை பேர் வாயையும் கட்டிப் போட்டிருந்தார். ‘கொலை, கொள்ளை நடந்தா அதுக்கு அரசாங்கம் என்ன செய்யமுடியும் என்று கேட்டார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். போலீஸ்ன்னு ஒரு துறை இருக்குது, அது எடப்பாடி கையில் இருக்குன்னாவது இவருக்குத் தெரியுமா?

இந்த நிலையில்தான் இன்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதாவது, ராகுல்காந்திதான் இந்தியப் பிரதமர் என்று அறிவிப்பு வெளியிட்டாராம் ஸ்டாலின். அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டே போகிறாராம் ராகுல்.

அதுவும், ஆஸ்திரேலியாவில் ஒரு வெள்ளைக்காரப் பொண்ணை ராகுல் காந்தி பார்த்து வைத்திருக்கிறாராம். அந்தப் பொண்ணைக் கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவாராம். அடேங்கப்பா, உள்ளூர் விவகாரத்தைப் பாருங்கண்ணா, பார்க்க வழியில்லே.. இந்த லட்சணத்துல ஆஸ்திரேலியா காதலியைப் பார்த்தாராம் ராஜேந்திர பாலாஜி.

இன்னும் என்னவெல்லாம் பேசப் போறாங்களோ... அம்மா, நீதான் ஆவியா வந்து இவங்க வாயிலே போடணும்.