70 வருடங்களில் யாரும் செய்யாத முட்டாள் தனத்தை மோடி செய்துள்ளார்! மரண காட்டு காட்டும் ராகுல் காந்தி!

கடந்த 70 ஆண்டுகளில் யாரும் செய்யாத முட்டாள்தனத்தை மோடி செய்துள்ளார் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு


*உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கடந்த 70 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கப்பர் சிங் வரி (சரக்கு மற்றும் சேவை வரி) எனும் முட்டாள்தனத்தை யாரும் செய்ததில்லை. தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை காவலர் (சவுகிதார்) திருடிவிட்டார்.

22 லட்ச காலி பணியிடங்களை நிரப்ப மோடி விரும்பவில்லை. அனில் அம்பானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் எங்கு உள்ளனர்..? சிறையிலா அல்லது வெளியிலா..? நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்து மோடி அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் பணம் திரும்ப அவர்களுக்கு கிடைக்கும்” என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.