பெட்டி பெட்டியாக பணம்? மதியாதார் தலைவாசலை மீண்டும் மிதித்த லாரன்ஸ்!

லக்ஷ்மி பாம் என்ற இந்தி திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் இணைந்துள்ளார்.


ஏழு ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளியான திரைப்படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியிருந்த இப்படம் தமிழில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலைக் குவித்தது. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதே கதாபாத்திரத்தை ராகவா லாரன்ஸ் ஏற்று திறம்பட கையாண்டிருப்பார். இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த படம் இந்தியில் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியில் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை என்று கூறிய ராகவா லாரன்ஸ் லட்சுமிபாம் திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் அறிவித்துள்ளார்.

தனது கருத்துக்கும் உணர்வுக்கும் அக்ஷய்குமார் மதிப்பளித்து இருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்காக அக்ஷய்குமார் இருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் லட்சுமி பாம் சத்தத்துடன் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் சுயமரியாதை காரணமாக தான் விலகுவதாக அறிவித்த லாரன்ஸ் தற்போது அந்த லட்சுமி பாம் படக்குழு வருத்தம் தெரிவித்ததா என்பதை தெரிவிக்கவில்லை. இது குறித்து விசாரித்த போது, ஏற்ககனவே பேசியதை விட கூடுதல் சம்பளம் என்று கூறியதால் லாரன்ஸ் படத்தை மீண்டும்இயக்க ஒப்புக் கொண்டதாகவும், இதே போல் இயக்கத்தில் தலையீடு இருக்காது என்கிற தயாரிப்பாளரின் உத்தரவாரத்தையும் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.