அப்பாவுக்கும் இன்பதுரைக்குமான மோதலில் ராதாபுரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.
ராதாபுரம் அப்பாவு எம்.எல்.ஏ. ஆகவே முடியாதா? இன்பதுரைக்கு சந்தோஷம்தான்!
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகும் தீர்ப்பு காலதாமதம் ஆகிறது. இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், ராதாபுரம் தீர்ப்பு காலதாமதம் ஆவது வேதனைக்குரியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராதாபுரம் தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் அருண்மிஸ்ரா அமர்விடம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றம் தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் இருப்பதால், முழுமையான விசாரணை நடத்தியபின்னரே தீர்ப்பளிக்கமுடியும் என்று கூறினார்கள். அடுத்துப் இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரத்தோஹி, ‘எங்களுடைய வாதம் ஒன்றே ஒன்றுதான். அதாவது நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கெசடட் அதிகாரிகள் இல்லை என்பதால், அவர்களுக்கு சான்று அளிக்கும் அதிகாரம் கிடையாது என்றனர்.
இவர்கள் இருவரது வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிமன்றம், ‘ஏற்கெனவே போடப்பட்ட தடை ஆணை தொடரும்’’ என்று கூறி வழக்கை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
எப்படியாவது எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்று அப்பாவு ஆசைப்பட்டாலும், விதி விட மறுக்கிறதே.