சுஜித் உடல் முழுதாக மீட்கப்படவில்லையா..? ராதாகிருஷ்ணன் என்ன சொல்றார் கேளுங்க.

குழியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக முதன்முதலாக தகவல் சொன்னவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சமூகவலைதளங்களைல் வலம் வருவது போன்று, சுஜித் உடல் முழுதாக மீட்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன், ‘‘பேரிடர் மீட்புக் குழுவின் வழிகாட்டு முறையை பின்பற்றிதான் குழந்தையின் உடலை மீட்டோம். ஏற்கனவே கும்பகோணம் தீ விபத்தின்போது குழந்தைகளின் உடலை புகைப்படமாக காட்சிப்படுத்தியதால் உலகம் முழுவதிலும் இருந்து எழுந்த கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.  

இந்த விஷயத்தில் இறந்த உடலை மீட்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு வழிகாட்டுதல் முறையை கொண்டுவந்துள்ளது. போரில் இறந்த வீரர்கள் உள்பட யாராக இருந்தாலும் சிதைந்த நிலையில் இருக்கும் சடலத்தை காட்டுவதற்கும் வழிகாட்டுமுறை உள்ளது. அதனால்தான் குழந்தையின் உடலை யாருக்கும் காட்டவில்லை’’ என்று பதில் சொன்னார்.

இரட்டைக் கோபுரம் இடிப்பு தொடங்கி சீன சடலம் வரையிலும் வெளிநாடுகளில் உயிர் இழந்தவர்களைக் காட்டுவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன என்பதாலே, காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

முழு உடல் பாகமும் மீட்கப்பட்டதா என்ற கேள்விக்கு கடைசி வரை ராதாகிருஷ்ணன் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.