ஜெயலலிதா ரகசியம் காப்பாற்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது புகார் மழை

பீலா ராஜேஷ் இருக்கும்போதே சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்


அப்போதே, பீலாவின் பதவிக்கு ஆபத்து என்று பலரும் சொல்லிவந்தார்கள். அப்படியே ஆயிற்று. இப்போது சுகாதார துறை செயலாளராக மாறிவிட்டார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், இந்த மாற்றத்துக்கு தி.மு.க. எகிறிக் குதிக்கிறது. நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. ஐ.டி. டீம் எக்கச்சக்கமாக புகார்களை அள்ளித் தெறிக்கிறது. ஏனென்றால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சையை மறைத்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

தி.மு.க.வின் நபர்கள் எழுதியிருக்கும் பதிவு இது. வெள்ளையா இருக்குறவனே பொய் சொல்ல மாட்டானா?

சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் விட்ட பீலாக்கள் காரணமாக மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு .ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்ட போதிலும், இப்போது நியமிக்கப்பட்டவர் மீதும் சிறுவன் சுஜீத் மரண சம்பவம் நிகழ்ந்த போது இதுபோன்ற விமர்சனங்கள் உண்டு.

டெங்கு வந்து பலர் மரணித்த போது அது டெங்கு அல்ல மர்ம காய்ச்சல் என்று கூறியது போல இனி எல்லாமே மர்மமாக இருந்து விடக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பல்லோ மர்மங்கள் எதுவும் ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ, எதிர் கட்சிக்கோ, நாட்டுக்கோ வெளிவராமல் தடுக்கப்பட்ட போது தமிழக சுகாதாரத் துறை செயலராக இருந்தது இந்த ராதாகிருஷ்ணன்தான்.

ஆனானப்பட்ட ஜெயலலிதா அவர்களின் மரணமே இன்று வரை மர்மம்தான் .ஏற்கனவே தமிழக கொரானா மரணங்களும் உண்மையாக கணக்கில் வராமல் இருப்பதாக ஊடகங்களும் பத்திரிக்கைகளும் எழுதுகின்றன. நல்லதே நடக்க வேண்டும் என்கிறது இந்த பதிவு.சுஜீத், ஜெயலலிதா, டெங்குவை இவர்தான் கையாண்டார் என்பது தெரியும்போது உள்ளுக்குள் பகீர் என்று வரத்தான் செய்கிறது.