எம்பி தேர்தலில் எத்தனை சீட் கிடைக்கும்? எடப்பாடியிடம் ரபி பெர்னாடு ஒப்படைத்த சர்வே ரிப்போர்ட்!

தேர்தல் பிரசாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி கிளம்புவதற்கு முன்பு உளவுத் துறை காவல் துறையிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டாராம்.


உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் படி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் என்றும் மற்ற இடங்களில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும் என்று அறிக்கை சொன்னது.

அதனால் அப்செட்டில் இருந்த எடப்பாடியிடம், ’இதை நம்பாதீங்க. நான் ஒரு பக்கா ரிப்போர்ட் தயார் செய்து தருகிறேன்” என்று சொன்னாராம் ரபி பெர்னார்டு. அதன்படி சென்னை கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு, தமிழகம் முழுவதும் நேரடி சர்வே (?) எடுத்தாராம்.

அந்த சர்வே ரிப்போர்ட் உளவுத் துறை சொன்ன நம்பரை அப்படியே திருப்பிப் போட்டு இருந்ததாம். அதாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு 25 தொகுதிகளும், தி.மு.க. கூட்டணிக்கு 14 தொகுதிகளும் தமிழகத்தில் கிடைக்கும் என்று தெரிவித்ததாம். உடனே எடப்பாடியை சந்தித்து வாயெல்லாம் பல்லாக இந்த சர்வே ரிப்போர்ட்டைக் காட்டினாராம்.

உடனே எடப்பாடியாரும் பளீரென்று ஹேப்பியாகியிருக்கிறார். அதானே, நான் போற இடத்தில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமா வர்றாங்களே… இதை விட இன்னமும் கூடவே ஜெயிப்போம் என்று ரவி பெர்னார்ட் முதுகில் தட்டிக் கொடுத்தாராம். இதைத்தானே எதிர்பார்த்தர் ரவி, கிலோ கணக்கில் சந்தோஷத்துடன் இருக்கும் ரவி, தேர்தலுக்கு முன்னர் மேலும் இரண்டு சர்வே எடுக்க இருக்கிறாராம்.

அதெப்படிங்க அ.தி.மு.க. ஆள் சர்வே எடுத்தா, அவங்களே ஜெயிச்சுடுறாங்க…?