படுக்கை அறை கட்டிலுக்கு அடியில் குழந்தையின் சடலம்..! திடீரென மாயமான 22 வயது தாய்..! கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் குழந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


பஞ்சாப் மாநிலத்தில் தசரத், ரூபா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய 6 மாதம் பெண் குழந்தை கடந்த டிசம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தது. தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக எல்லோரையும் ரூபா நம்ப வைத்தார். இந்நிலையில் ரூபா மற்றும் இரண்டரை வயது ஆண் குழந்தை காணாமல் போய்விட்டனர்.

இதுகுறித்து கணவர் தசரத் போலீசில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே வீட்டில் இருந்த பொருட்களை தசரத் ஏறக்கட்டிக் கொண்டிருந்தபோது பெட்டியை திறந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய இரண்டரை வயது ஆண் குழந்தையின் சடலம் பெட்டிக்குள் இருந்துள்ளது. இதையடுத்து போலீசுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரூபாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். கடந்த டிசம்பர் மாதமும் ஒரு குழந்தை இறந்து போனதால் அந்த குழந்தையையும் ரூபாதான் கொன்றிருப்பார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து 2 குழந்தைகளை ரூபா கொல்வதற்கு காரணம் கணவருடன் ஏற்படும் குடும்பத் தகராறா அல்லது ஏதாவது கள்ளக்காதல் விவகாரமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.