அடி தாங்க முடியாம கதறிய தலித்! தண்ணீர் கேட்டவர் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்! துடிதுடித்து இறந்த பரிதாபம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பஞ்சாப் மாநிலத்தில் தலித் நபரொருவரை சிறுநீர் குடிக்க வைத்ததால், அவர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் தலித் நபருக்கும், உயர்சாதி நபர் என கூறப்படும் ரிங்கு என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது ரிங்கு தலித் நபரை அடித்து துன்புறுத்துகிறார்.

வலியால் துடித்த அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது, அவருக்கு ரிங்கு மற்றும் அவரது நண்பர்கள் வாயிலேயே சிறுநீர் ஊற்றி மிகவும் கொடுமைபடுத்தி இருக்கின்றனர். 

மிகவும் அவமானப்பட்ட தலித் நபர் இறப்பதற்கு முன்பாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரிங்கு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த சாதிய கொடுமையில் ஈடுபட்ட நபர்களை தூக்கிலிடும்படி ஊர் மக்கள் போராடி வருகின்றனர்.