பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர்! வந்ததோ சிக்கன் பட்டர் மசாலா! ZOMATOக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்!

புனேவில் ஆன்லைன் செயலியான சொமாட்டோ அப்ளிகேஷன் மூலம் வழக்கறிஞர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார்.


அவர் செயலி மூலம் பன்னீர் மசாலா ஆர்டர் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு மாற்றாக சிக்கன் மசாலாவை சொமாட்டோ நிறுவன ஊழியர் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் பன்னீர் பட்டர் மசாலாவிற்கு பதிலாக சிக்கன் மசாலா மாறி வந்துள்ளதையடுத்து சொமாட்டோ நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை விசாரித்த நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புனே பகுதியில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ஷண்முக் தேஷ்முக் இவர் இரவு உணவிற்காக சொமாட்டோ செயலி வாயிலாக பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை பெற்றுக் கொண்ட சொமாட்டோ நிறுவனம் ஆப் மூலம் அவருக்கு ஆர்டரை உறுதி செய்துள்ள குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது.

மற்றும் 20 நிமிடத்திலேயே ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வந்து உள்ளது, இதையடுத்து பணத்தை கொடுத்து ஆர்டரை பெற்றுக் கொண்டார். ஆனால் அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது தான் ஆர்டர் செய்தது பன்னீர் பட்டர் மசாலா தான் ஆனால் வந்துள்ளது சிக்கன் போல உள்ளது என சந்தேகித்து உள்ளார்.

இரண்டுமே சுவை ஒரே மாதிரியாக இருப்பதால் அவருக்கு முதலில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது முறையாக அதே செயலி மூலம் அதே ஹோட்டலில் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து டெலிவரி செய்யும் நபர் வந்து கொடுத்த போது அதை வாங்கி உடனே பிரித்துப் பார்த்த வழக்கறிஞர் உடனே அதிர்ச்சி அடைந்தார்.அப்போது டெலிவரி செய்ய வந்த நபரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கு அவர் சரியாக பதில் அளிக்காத நிலையில் ஆத்திரமடைந்த அவர் செயலி மூலம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டு இது தங்களது தவறு இல்லை ஹோட்டலின் தவறு என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து மனமுடைந்த ஷண்முக் புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சொமாட்டோ நிறுவனத்தின் மீதும் அவர் ஆர்டர் செய்த ஹோட்டலின் மீதும் ரூபாய் 55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவரிடம் 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து வரும் நபர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.