வேகம் ஒருநாள் என்னை கொல்லும்! இளைஞனின் பைக் வாசகம் உண்மையான அதிர்ச்சி சம்பவம்!

பைக் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகத்தின் படியே மாணவர் ஒருவர் உயிரிழந்த பரிதாபம் கடலூர் அருகே நிகழ்ந்துள்ளது.


புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டிப்ளமோ படித்து வரும் மாணவர் தனது நண்பரான ஏகாஷ் என்பவரை அழைத்துக்கொண்டு நேற்றையதினம் கடலூர் நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

அப்போது உரிய பாதுகாப்பு இல்லாமல், ஹெல்மெட் கூட அணியாமல் அதிவேகமாக சென்றதாகவும் அவ்வழியாக சென்றவர்கள் குறிப்பிட்ட நிலையில், கடலூருக்கு முன்னதாக இருக்கும் சின்னாண்டி குழி பகுதியை நோக்கிச் செல்லும் போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பனை மரத்தில் ஆகாஷ் மோதியதாக கூறப்படுகிறது. 

விபத்தில் ஆகாஷ் தலையில் பெரிதாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு பின்னால் அமர்ந்து சென்ற ஏகாஷ் என்ற மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். 

ஆகாஷ் என்ற மாணவன் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஆங்கிலத்தில், "எனது வேகமே என்னை கொல்லக்கூடும். ஆதலால் நீங்கள் யாரும் அழ வேண்டாம்" என எழுதப்பட்டிருந்தது.  

தனது வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் படியே ஆகாஷ் உயிரிழந்ததால், இது மற்ற மாணவர்களுக்கு பாடமாக அமையும் என போலீஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.