நம்மள சேர்ந்து வாழ விடமாட்றாங்க..! ரூம் எடுத்து ஆசை தீர உல்லாசம்..! பிறகு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

ராமேஸ்வரத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே அறையில் ஆண், பெண் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் சத்யா இருவரும் நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒன்றாக தங்கியுள்ளனர். இந்நிலையில், அறையை சுத்தம் செய்வதற்காக நேற்று காலை ஊழியர் ஒருவர் அறையின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் கதவை திறக்காததால் பதறிப்போன ஊழியர் நிர்வாகத்திடம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.  

விரைந்து வந்த நிர்வாகத்தினர் கதவை உடைத்துப் பார்த்ததில் ஆண், பெண் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இவர்கள் இருவருக்கும் தனித்தனியே குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து இருக்கலாம் அல்லது திருமணத்திற்கு பின்பு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.