என்னாது கிரண்பேடி ஒரு பேயா..? நாராயணசாமியின் திடீர் கண்டுபிடிப்பு

புதுவையில் முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் கடுமையான யுத்தம் போய்க்கொண்டு இருக்கிறது. ஒருவரையொருவர் குற்றம் சொல்வதிலேயே நேரம் போகிறது.


எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற அனுமதி தருவதில்லை என்று கிரண் பேடி மீது நாராயனசாமி குற்றம் சாட்ட, உருப்படியாக எந்தத் திட்டமும் போடுவதில்லை என்று கிரண் பேடி நாராயணசாமியை எகிறியடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திராகாந்திக்கு நினைவு தினத்தை புதுவை முதல்வர் நாராயணசாமி கொண்டாடினார். அப்போது அவர், ‘மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கிரண்பேடி இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களைத் தடுக்கும் பேய் போன்று செயல்பட்டு வருகிறார்’ என்று கடுமையாக குற்றம் சாட்டினார். 

காஷ்மீரில் வெளிநாட்டு எம்.பி.க்களை மட்டும் அனுமதித்தது தவறு என்று மோடி மீதும் பாய்ச்சல் நடத்தினார் நாராயண சாமி. தன்னை பேய் என்று விமர்சனம் செய்ததைக் கண்டு கிரண்பேடி அதிர்ந்துபோயிருக்கிறார்.

பேய் அடிச்சா எப்படியிருக்கும்னு நாராயணசாமிக்குத் தெரியுமா?