தேனி அருகே வீதிகளில் ரேஸ் வைத்து பைக்கில் வேகமாக செல்லும் வாலிபர்களை கண்டித்து மறியல் நடத்தபட்டது அதில் 3 வாலிபர்கள் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது, கடுப்பான மக்கள் விரட்டி விரட்டி வாலிபர்களை அடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பைக்ரேஸ் இளைஞர்களுக்கு துரத்தி துரத்தி அடி, உதை! வெகுண்டெழுந்த மக்கள்! ஏன் தெரியுமா?

பெரியகுளம் அடுத்த லட்சுமி புரத்தில் தெருவிற்குள் அதிவேகமாக பைக்கில் ரேஸ் வைத்து செல்வதால் குழந்தைகள் நடமாடும் போது ஆபாத்தாக முடிந்து விடுகிறது என அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று தெருவில் அதிவேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி தட்டி கேட்ட முரளி என்பவர் தாக்கபட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மறியலில் இருந்த மக்கள் முன்பு, அந்த வழியாக சென்ற 3 வாலிபர்கள் போராட்டகளத்தில் இருப்பது போல செல்பி எடுத்தும் ,டிக்டாக் வீடியோக்கால் செய்து கொண்டிருந்ததை பார்த்த பொது மக்கள் ஆத்திரமடைந்து அவர்களை விரட்டி அடிக்க துவங்கினர். ஏற்கனவே மறியலை கைவிட பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்த போலீசார் உடனடியாக
அந்த வாலிபர்களை மீட்டு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர்கள் மீட்கபடுவதற்க்குள் தர்ம அடி பெற்றனர். இனி போராட்ட களத்தில் இருப்பது போல பாவலா காட்டுபவர்கள், பைக்கை வைத்து கொண்டு பெண்கள் முன்னர் பந்தாகாட்டும் இளைஞர்கள் சற்று கவனத்துடன் இருக்க காவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.