தேர்தல் முடிந்துவிட்டது! சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்தது!

சமையல் சிலிண்டர் மீதான திடீர் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


பாஜக கடந்த முறை ஆட்சிக்கு வந்த போது கியாஸ் சிலிண்டர் மீதான மானியம் கொண்டு வந்தது இதன்படி பயனாளிகள் 626 ரூபாய் மொத்தமாக செலுத்தி சிலிண்டர் வாங்கவேண்டி இருந்தது, பின்னர் மானியமாக வங்கி கணக்கில் ரூபாய் 209 மாதாந்திர தவனையில் செலுத்தபடும் என  அறிவிக்கபட்டது.

இதன் மூலம் போலியான கள்ள சந்தை விற்பனை குறையும் என நம்பிக்கை தெரிவிக்கபட்டது. ஆனால் இந்த மானியம் பெரும்பாலானோருக்கு சரிவர கிடைக்கபெறவில்லை என குற்ற்ச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் , தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக கியாஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வை  மீண்டுமாக கையில் எடுத்திருக்கிறது .

மத்திய அரசு எரிவாயுவிற்க்கான விலையை எண்ணெய் நிறுவனமே நிர்ணயிக்க அனுமதித்ததன்படி,மானியல் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 25 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை 728 ரூபாயிலிருந்து, 753 ரூபாயாக உயர்ந்துள்ளது. மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ஒரு ரூபாய் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அதன் விலை 485 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீதான இந்த திடீர் விலையேற்றம்,நடுத்தர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.